search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் போட்டி"

    • பாகலஹள்ளி மைதானத்தில் ஏஎம்ஆர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 96 அணிகள் பங்கேற்கின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாகலஹள்ளி மைதானத்தில் ஏஎம்ஆர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் .பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு அணி வீரர்களை அறிமுகம் செய்து கொண்டவுடன் டாஸ் போட்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இங்கு நடைபெறும் போட்டியில் 96 அணிகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பரிகம் சண்முகம், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கவுன்சிலர் காமராஜ், அறிவு, அன்பு கார்த்திக், ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, முத்துவேல், சின்னசாமி மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
    • பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    கிரிக்கெட் போட்டியை கபிலர்மலை தி.மு.க ஒன்றிய செயலாளரும், அட்மாகுழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாள ருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், பேரூர் தி.மு.க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்கள்

    ஆற்காடு:

    ஆற்காடு ஜி.வி.சி பள்ளியில் நடைபெற்ற பசுமைக்கான கிரிக்கெட் போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி டாஸ் போட்டு தொடங்கி வைத்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மரங்கன்றுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஆற்காடு நகர துணை சேர்மன் பளவக்கோடி சரவணன், பள்ளி நிர்வாக செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, நிர்வாகிகள் பரமசிவம், சரவணன், கிஷோர், ஆனந்தன், அற க்கட்டளை நிறுவனதலைவர் கோபிநாத் அனைவரையும் வரவேற்றனர். ஆற்காடு நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்கள்.

    • கமுதியில் நடந்த தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மைதானத்தில் கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.

    இதில் சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் மதுரை என்.ஏ.சி.சி. அணியை வீழ்த்தி மதுரை வேலவன் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முதலிடம் பெற்ற இந்த அணிக்கு ரூ.50ஆயிரம், பசும்பொன் ஊராட்சிமன்ற தலைவர் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் வேலவன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் போஸ் செல்லப்பா ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.

    2-ம் இடம் பெற்ற மதுரை என்.ஏ.சி.சி. அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை, கோட்டை மேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் வழங்கப் பட்டது. 3-ம் இடம் பெற்ற கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகை, நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் முருகன், வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சிரஞ்சீவி ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.

    4-ம் இடம் பிடித்த திருப்பூரை சேர்ந்த 22யார்ட்ஸ் கார்மெண்ட்ஸ் அணிக்கு ரூ.10ஆயிரம் பரிசு தொகை, முன்னாள் வடக்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் நேதாஜி சரவணன் சார்பில் வழங்கப்பட்டது.

    முதல் 4 இடம் பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டது. அவைகள் முன்னாள் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் ராமையா சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழங்கினார்.

    இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் தலைவர் காளிமுத்து மற்றும் பலர் செய்திருந்தனர்.

    தென் மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்திய கோட்டைமேடு நண்பர்கள் அணியை இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • போலீஸ் மற்றும் கன்னிப்பட்டி ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • இந்த போட்டியை ஏடிஎஸ்பி இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    போலீஸ் துறை சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    போலீஸ் மற்றும் கன்னிப்பட்டி ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை ஏடிஎஸ்பி இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

    தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கோப்பையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், செல்வமணி, வெங்கடா சலம் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    • பின்னலாடை நிறுவனங்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்த ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
    • 15 ஓவருடன் லீக் சுற்று, 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் தினமும் ஓய்வின்றி உழைக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபடும் தொழிலாள ர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையிலும் பின்னலாடை நிறுவனங்களு க்கிடையே நட்புறவை மேம்படுத்த நிப்ட்-டீ கல்லூரி ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. அவ்வகையில் 6-வது என்.பி.எல்., கிரிக்கெட் தொடர், வருகிற ஏப்ரல் 2-ந்தேதி துவங்குகிறது. நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் வாரந்தோ றும் ஞாயிற்றுக்கி ழமை போட்டிகள் நடை பெறும். 15 ஓவருடன் லீக் சுற்று , 20 ஓவருடன் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடத்த ப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மட்டுமே என்.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்க முடியும். உள்நாட்டு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனம் என பின்னலாடை துறை சார்ந்த எந்தவகை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளரும் பங்கேற்கலாம்.

    தொழிலாளர் அல்லாத வேறுநபர்களை அணியில் சேர்க்க கூடாது. குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரிவ தற்கான அடையாள அட்டை,கடைசி மூன்று மாத சம்பள ரசீது, வீரரின் புகைப்படம், பணிபுரியும் நிறுவன நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு என்.பி.எல்., சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

    பங்கேற்க விரும்பும் பின்னலாடை நிறுவன கிரிக்கெட் அணியினர் https://www.nifttea.ac.in/npl-2023 என்கிற தளத்தில் வருகிற 27-ந் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு 95971 54111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
    • ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசாரிடம் விளை யாட்டை ஊக்குவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோ-கோ, பேட்மின்டன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சாமிதோப்பு அருகே வடக்கு தாமரை குளத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து போலீசருக்கான சீருடைகளை அவர் அறிமுகம் செய்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இதில் கலந்து கொண்டனர். தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிசனில் இருந்து 100-க்கு மேற்பட்ட போலீசார் தொடக்க விழா நிகழ்ச் சியில் பங்கேற்றனர்.

    முதலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தக்கலை சப்-டிவிசன் மற்றும் நாகர்கோவில் சப்-டிவி சனைச் சேர்ந்த போலீ சார் விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சப்- டிவிசன் மற்றும் குளச்சல் சப்-டிவிசனை சேர்ந்த போலீசார் 2-வது போட்டி யில் கலந்து கொண்டு விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், போலீசாரிடம் விளையாட்டை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.தற்பொழுது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோகோ, பேட்மிட்டன் போட்டிகள் நடக்கிறது என்றார்.

    வாலிபால், கபடி, கோகோ, பேட்மின்டன் போட்டிகளை படிப்படியாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடத்த போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    • நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
    • இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் சர்வதேச பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீலகிரி ஓட்டல் ரெஸ்டாரண்ட் அசோசிசன் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்சியில் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் முன்னாள் தலைவர் முரளிகுமார் கொடியேற்றினார். பிரித்தி கிளாசிக்டவர் மேலாளர் ரசூல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்சியில் தாஜ், சலிவன்கோர்ட், ஜெம்பார்க், பிரித்திகிளாசிக்டவர், ஸ்டர்லிங், குல்னிமேனர், சன்சைன் உள்ளிட்ட 12 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டது. இதன் இறுதி போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. நிகழ்சியயை செல்வம், கனேஷ், சதிஷ், பிராங்களின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
    • இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து விலகல்.

    8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பயிற்சி ஆட்டத்தின்போது இடது கைவிரவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று பொறுப்பு பயிற்சியாளர் கனித்கர் நேற்று தெரிவித்தார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகும்.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • 24 அரசு பள்ளி அணிகள் பங்கேற்பு
    • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை-2022-23 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    கிரிக்கெட் போட்டிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருப்பத்தூர் பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

    மாவட்ட முழுவதும் இருந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அரசு பள்ளிகள் சார்பில் 24 அணிகள் பங்கேற்றது போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் வி.குணசுந்தரி தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி சேதுராஜன், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசன், திருப்பத்தூர் மாவட்டம் கிரிக்கெட் விளையாட்டு சங்க தலைவர் ஏ.சுந்தர், உட்பட அரசுபள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகள் வியாழக்கிழமை இன்று அரசுபள்ளி மாணவர்களுக்கும் அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது இந்த கிரிக்கெட் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு தேவையான பேட் கிரிக்கெட் பந்து, ஹெல்மெட் உள்ளிட்ட வைகள் வழங்கப்படுகிறது பதினோரு பிரிவுகளில் வெற்றி பெறும் அணிகளில் உள்ள அனைவருக்கும் முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 2-வது பரிசாக அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம், 3-வது பரிசாக அனைவருக்கும் ரூ 1000, வழங்கப்பட்டு உள்ளது இது மட்டும் இன்றி மாணவிகளுக்கும் மற்றும் பொது பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் இதே போன்று வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியது
    • இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்..கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான முதலாமாண்டு ''பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பை- 2023'' கிரிக்கெட் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் சுந்தர்ராஜன், கல்லூரி அகாடமிக் இயக்குநர் கோபால்சாமி, உடற்கல்வித்துறை தலைவர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த போட்டியானது கல்லூரிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் ஆகியோருக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் பி.எஸ்.ஆர். அலுமினி அணி, பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கலைக்கல்லூரி, சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரி கிரிக்கெட் அணிகள் உள்பட 28 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் ெவற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ம் பரிசாக 5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் பரிசாக பெறும்வற்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், உடற்கல்வித்துறை இயக்குநர் சுந்தரமுர்த்தி, பேராசியர்கள் ரமேஷ், செந்தில்குமார், ராதா மற்றும் இதர பேராசிரியர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,012, வேலாயுதம்பாளையம் எஸ்.எஸ்.பாண்டியன் அணிக்கு 2-ம் பரிசாக ரூ.10,012, வெங்கரை பெப்சி அணிக்கு 3-ம் பரிசாக ரூ.7,012, கொடுமுடி கே.எம்.டி அணிக்கு 4-ம் பரிசாக ரூ.5,012 வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமலிங்கம், தீபா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள், பில்லர்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×